என் மலர்
உள்ளூர் செய்திகள்
வானகரம் அருகே நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்-வாலிபர் பலி
- திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் மரிய அல்போன்ஸ். இவரது மகன் அந்தோணி கவின்.
- தென்காசியை சேர்ந்த செல்வராஜ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
போரூர்:
திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் மரிய அல்போன்ஸ். இவரது மகன் அந்தோணி கவின் (வயது29) கூலித் தொழிலாளி.
நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் மதுரவாயல் பைபாஸ் சாலையில் தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். வானகரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது வேகமாக மோதியது. இதில் முகம் மற்றும் தலையில் பலத்த காயமடைந்த அந்தோணி கவின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் துளசிமணி மற்றும் போலீசார் விரைந்து வந்து அந்தோணி கவினின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உரிய எச்சரிக்கை இன்றி சாலையோரம் லாரியை நிறுத்தி சென்றதன் காரணமாக விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து லாரி டிரைவரான தென்காசியை சேர்ந்த செல்வராஜ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.