என் மலர்
உள்ளூர் செய்திகள்
கருணாநிதி பற்றி அவதூறு: நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது
- கருங்கல்பட்டியை சேர்ந்த 56-வது வார்டு தி.மு.க. செயலாளர் முருகேசன் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
சேலம்:
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி சமூக வலைதளத்தில் குமரேசன் என்பவர் அவதூறு செய்தி பரப்பி உள்ளனர். இதை பார்த்த தி.மு.க.வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து கருங்கல்பட்டியை சேர்ந்த 56-வது வார்டு தி.மு.க. செயலாளர் முருகேசன் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் யார் என்று விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் அவர் சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த குமரேசன் (49) என்பது தெரிய வந்தது. இவர் டவுண் பகுதியில் வாகன உதிரி பாகம் விற்பனை கடை வைத்துள்ளார். மேலும் இவர் நாம் தமிழர் கட்சியில் தெற்கு தொகுதி முன்னாள் துணை தலைவராக இருந்து உள்ளார். இதையடுத்து அவரை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாம் தமிழர் கட்சி மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.