search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரி அருகே பாமாயில் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
    X

    நாங்குநேரி அருகே பாமாயில் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

    • பாணான்குளம் நான்கு வழி சாலையில் பாமாயில் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • கவிழ்ந்த லாரியில் இருந்த பாமாயில் எண்ணெயை வேறு லாரியில் ஏற்றும் பணியிலும் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பாணான்குளம் நான்கு வழி சாலையில் பாமாயில் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட19 டன் பாமாயில் எண்ணெயை ஏற்றிய லாரி ஒன்று நேற்று இரவு திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    இன்று அதிகாலை நெல்லை மாவட்டம் பாணான்குளம் காவல் நிலையம் எதிரே உள்ள நான்கு வழி சாலையில் வரும்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த தடுப்பு கம்பிகள் மீது மோதி கவிழ்ந்தது . அப்போது அதிர்ஷ்டவசமாக டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். இதில் லாரி பலத்தை சேதம் அடைந்தது. தகவல் அறிந்து அங்கு வந்த நாங்குநேரி தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர் .

    மேலும் கவிழ்ந்த லாரியில் இருந்த பாமாயில் எண்ணெயை வேறு லாரியில் ஏற்றும் பணியிலும் ஈடுபட்டனர். அப்பகுதியில் மழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் தாமதமாக நடந்து வருகிறது. இது குறித்து மூன்றடைப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×