என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரஜினிகாந்தி (பழையபடம்).
தக்கலை அருகே வீட்டிற்குள் நர்சு மர்ம மரணம்

- போலீசார் விரைந்து வந்து ரஜினிகாந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- ரஜினிகாந்தி மர்ம மரணம் குறித்து தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தக்கலை:
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள சாரோடு வெட்டுக்காட்டு விளை பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் குமார்.
இவரது மனைவி ரஜினிகாந்தி (வயது 34). பி.எஸ்.சி. நர்சிங் படித்துள்ள இவர் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்தார். இதனால் கணவருடன் மும்பையிலேயே வசித்து வந்தார்.
இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் ரஜினிகாந்தி, வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பினார். அதற்காக பாஸ்போர்ட் எடுக்க வேண்டி இருந்தது. எனவே அவர் மட்டும் சொந்த ஊருக்கு வந்தார்.
நேற்று பல்வேறு பணிகளை முடித்து விட்டு ரஜினிகாந்தி வீட்டுக்கு வந்தார். பின்னர் குடும்பத்தினருடன் இரவில் சாப்பிட்டு விட்டு அறைக்கு தூங்கச் சென்றார். இன்று காலை அவர் நீண்ட நேரமாக எழுந்து வரவில்லை.
இதனால் அவரது அறைக்கு, சகோதரர் ஜெயசீலன் சென்று பார்த்தார். அப்போது ரஜினிகாந்தி படுக்கையிலேயே அசைவற்ற நிலையில் கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயசீலன் அருகில் சென்று பார்த்த போது, ரஜினிகாந்தி இறந்து கிடந்தது தெரியவந்தது.
அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. இது குறித்து தக்கலை போலீசில் ஜெயசீலன் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து ரஜினிகாந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரஜினிகாந்தி மர்மசாவு குறித்து தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.