என் மலர்
உள்ளூர் செய்திகள்
பூதப்பாண்டி அருகே நர்சிங் மாணவி பலாத்காரம்- வாலிபர் போக்சோ வழக்கில் கைது
- பாதிக்கப்பட்ட மாணவி நாகர்கோவிலில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
- மேலும் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
நாகர்கோவில்:
பூதப்பாண்டி அருகே உள்ள அழகிய பாண்டியபுரம் நன்றிகுழி பகுதியை சேர்ந்த 16 வயது நர்சிங் மாணவி ஒருவர் நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் நர்சிங் படித்து வந்த போது எனது ஊரைச் சேர்ந்த தனேஷ் (வயது 20) என்பவர் என்னை காதலிப்பதாக கூறினார். பின்னர் நான் நெல்லையில் படித்துக் கொண்டிருந்தேன் அப்போது தனேஷ் விபத்தில் சிக்கி வீட்டில் இருந்து வந்தார்.
இதையடுத்து அவரை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றேன். அங்கு சில நாட்கள் தங்கி இருந்தேன். அப்போது தனேஷ் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இது தொடர்பாக நாகர்கோவில் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் .
இதையடுத்து தனேஷ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவி நாகர்கோவிலில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.