என் மலர்
உள்ளூர் செய்திகள்
கருங்கல் அருகே கல் குவாரியில் பாறை உடைக்க மக்கள் எதிர்ப்பு-போலீசார் குவிப்பு
- கள்ளியங்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி செயல்பட்டு வருகிறது.
- கல்குவாரியில் இருந்து பாறை எடுத்து செல்ல இருப்பதாக தகவல் பரவியது.
கருங்கல்:
கருங்கல் அருகே உள்ள பூட்டேற்றி கள்ளியங்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி செயல்பட்டு வருகிறது.
இந்த குவாரியில் இருந்து பாறைகள் உடைக்கப்பட்டு தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுகம் மற்றும் தூண்டில் வளைவு பணிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இங்கு பாறைகள் உடைக்கப்படுவதனால் விவசாய நிலங்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
எனவே கல் குவாரிக்கு கீழ ஆப்பிகோடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை கல்குவாரியில் இருந்து பாறை எடுத்து செல்ல இருப்பதாக தகவல் பரவியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்தக் கூடும் என்ற தகவல் பரவியது. இதனை தொடர்ந்து கல் குவாரியில் கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.