என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![வேலூர் மாவட்டத்தில் வாரிசு, துணிவு சிறப்பு காட்சிக்கு அனுமதி பெறாத 11 தியேட்டர் மீது வழக்கு வேலூர் மாவட்டத்தில் வாரிசு, துணிவு சிறப்பு காட்சிக்கு அனுமதி பெறாத 11 தியேட்டர் மீது வழக்கு](https://media.maalaimalar.com/h-upload/2023/01/13/1820989-casefiled.webp)
வேலூர் மாவட்டத்தில் வாரிசு, துணிவு சிறப்பு காட்சிக்கு அனுமதி பெறாத 11 தியேட்டர் மீது வழக்கு
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- வாரிசு, துணிவு திரைப்பட சிறப்பு காட்சிக்கு முன்அனுமதி பெற வேண்டும் என்று தியேட்டர் நிர்வாகத்துக்கு, காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
- மாவட்டம் முழுவதும் 11 தியேட்டர்களில் சிறப்பு காட்சிக்கு அனுமதி பெறாமல் திரையிட்டப்பட்டது போலீசாருக்கு தெரியவந்தது.
வேலூர்:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு ஆகிய திரைப்படங்கள் நேற்று முன்தினம் தியேட்டர்களில் வெளியானது.
தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் விஜய், அஜித் ரசிகர்களுக்காக அதிகாலை 1 மற்றும் 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. மார்கழி மாத கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், ரசிகர்கள் மேள, தாளத்துடன் படங்களை வரவேற்று கண்டு ரசித்தனர். வேலூர் மாவட்டத்தில் வாரிசு, துணிவு திரைப்படங்கள் 10-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகின.
பல தியேட்டர்களில் தலா 3 சிறப்பு காட்சிகள் வாரிசுக்கும், துணிவுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தன. ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் தியேட்டருக்கு சென்று தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படங்களை பார்த்தனர்.
வாரிசு, துணிவு திரைப்பட சிறப்பு காட்சிக்கு முன்அனுமதி பெற வேண்டும் என்று தியேட்டர் நிர்வாகத்துக்கு, காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் மாவட்டம் முழுவதும் 11 தியேட்டர்களில் சிறப்பு காட்சிக்கு அனுமதி பெறாமல் திரையிட்டப்பட்டது போலீசாருக்கு தெரியவந்தது.
இதுகுறித்து தியேட்டர் உரிமையாளர்கள், மேலாளர் மீது அந்தந்த எல்லைக்கு உட்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.