search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தேர்களுக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு
    X

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பெரிய தேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள காட்சி.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தேர்களுக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

    • உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் மற்றும் அம்மன் திருத்தேர்களை சீரமைக்க மூடி வைக்கப்பட்டிருந்த கண்ணாடி இழை தகடுகள் பிரிக்கப்பட்டுள்ளன.
    • விநாயகர், முருகர் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர்களை சீரமைக்க மூடி வைக்கப்பட்டிருந்த இரும்பு தகரங்கள் அகற்றப்பட்டன. தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடக்கிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அடுத்த மாதம் (நவம்பர்)24-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்க உள்ளது.

    27-ந் தேதி தங்கக்கொடி மரத்தில் கொடியேற்றப்பட உள்ளது. டிசம்பர் 3-ந்தேதி மகா தேரோட்டம் நடைபெறும். டிசம்பர் 6-ந்தேதி மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

    கடந்த 30-ந்தேதி பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது. இதையடுத்து அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு தேரடி வீதியில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஞ்ச ரதங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மகா தேரோட்டம் நடைபெறாததால் பஞ்ச ரதங்களை முழுமையாக சீரமைத்து அதன் உறுதி தன்மையை இறுதி செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் மற்றும் அம்மன் திருத்தேர்களை சீரமைக்க மூடி வைக்கப்பட்டிருந்த கண்ணாடி இழை தகடுகள் பிரிக்கப்பட்டுள்ளன.

    இதே போல விநாயகர், முருகர் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர்களை சீரமைக்க மூடி வைக்கப்பட்டிருந்த இரும்பு தகரங்கள் அகற்றப்பட்டன. தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடக்கிறது.

    பஞ்ச ரதங்களில் உள்ள சிற்பங்கள் அச்சாணிகள் உள்ளிட்டவற்றை பாதுகாக்கவும் மற்றும் அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்து விடாமல் தடுக்கவும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×