என் மலர்
உள்ளூர் செய்திகள்
பொள்ளாச்சி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட போலீஸ்காரர் திடீர் தற்கொலை
- திருமணத்தில் மணியரசுவுக்கு விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மணியரசு மனவேதனையுடன் காணப்பட்டார்.
- தங்கியிருந்த போலீஸ் குடியிருப்பில் இன்று மணியரசு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பொள்ளாச்சி:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பருத்தியூரைச் சேர்ந்தவர் மணியரசு (வயது 32). இவர் பொள்ளாச்சியை அடுத்த கோமங்கலம் போலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தார். போலீஸ் நிலையம் அருகே உள்ள குடியிருப்பிலேயே தங்கியிருந்து வேலை பார்த்தார்.
மணியரசுவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதையடுத்து அவருக்கு பெண் பார்த்து திருமணமும் நிச்சயிக்கப்பட்டது. அடுத்த மாதம் திருமணம் நடத்தவும் பெற்றோர் ஏற்பாடுகள் செய்து வந்தனர்.
இந்த திருமணத்தில் மணியரசுவுக்கு விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மணியரசு மனவேதனையுடன் காணப்பட்டார்.
இந்தநிலையில் இன்று தான் தங்கியிருந்த போலீஸ் குடியிருப்பில் மணியரசு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்த சக போலீஸ்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டு மணியரசுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. மணியரசு தற்கொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.