search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இன்று 307-வது பிறந்தநாள்: பூலித்தேவன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
    X

    இன்று 307-வது பிறந்தநாள்: பூலித்தேவன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

    • அரசு சார்பில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆகியோர் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 307-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி தென்காசி மாவட்டம் நெற்கட்டும் செவல் பச்சேரியில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் உள்ள சிலைக்கு முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மரியாதை செலுத்தினர்.

    அரசு சார்பில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆகியோர் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை, தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன், சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா, வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையாபாண்டியன், ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் முன்னாள் எம்.பி. வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்.

    இதேபோல் மத்திய இணைமந்திரி எல்.முருகன் தலைமையில் மாநில பா.ஜனதா துணைத்தலைவர் சசிகலா புஷ்பா உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    ம.தி.மு.க. சார்பில் சதன்திருமலைக்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    Next Story
    ×