search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேமுதிக எந்த கூட்டணியிலும் இல்லை- பிரேமலதா விஜயகாந்த்
    X

    தேமுதிக எந்த கூட்டணியிலும் இல்லை- பிரேமலதா விஜயகாந்த்

    • திமுகவுடன் மறைமுகமாக பேச வேண்டிய அவசியம் தேமுதிகவுக்கு இல்லை.
    • எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்குள் பல முரண்கள் உள்ளன.

    சென்னை:

    சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தே.மு.தி.க. எந்த கூட்டணியிலும் இல்லை. யாருடன் கூட்டணி என்பதை விரைவில் அறிவிப்போம்.

    கூட்டணியில் இல்லாத நிலையில் பாஜக கூட்டணி கட்சிகள் கூட்டத்திற்கு எப்படி அழைப்பு வரும். திமுகவுடன் மறைமுகமாக பேச வேண்டிய அவசியம் தேமுதிகவுக்கு இல்லை.

    எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்குள் பல முரண்கள் உள்ளன. திமுக தேர்தலுக்கு முன் சொன்ன வாக்குறுதி வேறு... நிறைவேற்றும் வாக்குறுதிகள் வேறுபாடாக உள்ளது.

    இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

    Next Story
    ×