என் மலர்
உள்ளூர் செய்திகள்
ராமாபுரம் பகுதியில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை- வாலிபர் கைது
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கஞ்சா, புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
போரூர்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கஞ்சா, புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
எனினும் போலீசாரின் எச்சரிக்கையை மீறி பல்வேறு இடங்களில் போதை பொருட்கள் விற்பனை தொடர்ந்து நீடித்து வருகிறது. அவர்களை போலீசார் கண்காணித்து கைது செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ராமாபுரம் பூத்தபேடு பகுதியில் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் அதே பகுதியை சேர்ந்த வினோத் (38) என்பதும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து வினோத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து இருந்து 2கிலோ கஞ்சா , 4 செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவருடன் கஞ்சா விற்பனையில் தொடர்புடையவர்கள் யார்?யார்? கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்வது எப்படி? எங்கிருந்து கஞ்சா கிடைக்கிறது என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.