என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைதான சரஸ்வதி.
லீனா மணிமேகலைக்கு மிரட்டல்- இந்து அமைப்பு பெண் நிர்வாகி கைது
- லீனா மணிமேகலைக்கு கோவையில் இருந்தும் எதிர்ப்பு குரல் ஒலிக்கத் தொடங்கியது. கோவை சொக்கம்புதூரை சேர்ந்தவர் சரஸ்வதி. சக்தி சேனா இந்து மக்கள் இயக்க தலைவராக உள்ளார்.
- இவர் கடவுள் படத்தை சர்ச்சைக்குரிய முறையில் வெளியிட்ட லீனா மணிமேகலைக்கு கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.
கோவை:
ஆவணப்பட இயக்குனரான லீனா மணிமேகலை தற்போது 'காளி' என்ற ஆவணப்படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தின் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கடவுளை கொச்சைப்படுத்துவது போல் இடம்பெற்றிருந்த அந்த போஸ்டருக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். போஸ்டரை வெளியிட்ட லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது.
லீனா மணிமேகலைக்கு கோவையில் இருந்தும் எதிர்ப்பு குரல் ஒலிக்கத் தொடங்கியது. கோவை சொக்கம்புதூரை சேர்ந்தவர் சரஸ்வதி. சக்தி சேனா இந்து மக்கள் இயக்க தலைவராக உள்ளார்.
இவர் கடவுள் படத்தை சர்ச்சைக்குரிய முறையில் வெளியிட்ட லீனா மணிமேகலைக்கு கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார். அதில் லீனா மணிமேகலையை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டலும் விடுத்து இருந்தார். இது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வ குமார் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இயக்குனர் லீனா மணிமேகலை குறித்து தகாத வார்த்தைகள் பேசி, கொலை மிரட்டல் விடுத்த சரஸ்வதி மீது செல்வபுரம் போலீசார் தகாத வார்த்தைகள் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து இன்று காலை சரஸ்வதியை போலீசார் கைது செய்தனர்.