என் மலர்
உள்ளூர் செய்திகள்
அந்தியூர் அருகே ஓடையில் தண்ணீர் குடிக்க வந்த ஒற்றை யானை
- நீர்வழி பாதையில் வனவிலங்குகள் ஆங்காங்கே நிற்கின்ற நீரினை பருகி தாகம் தீர்த்து வருகிறது.
- ஒற்றை யானை ஒன்று மணியாச்சி பள்ளம் நீரோடையில் தண்ணீர் குடிக்க வந்தது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மேற்கு மலைப் பகுதியில் அமைந்துள்ளது மணியாச்சி பள்ளம் நீர் ஓடை. இந்த ஓடையில் மழைக்காலங்களில் பெய்யக்கூடிய மழை நீரானது பாலாற்றின் வழியாக மேட்டூர் அணையை சென்றடைகிறது.
இந்த நீர்வழி பாதையில் வனவிலங்குகள் ஆங்காங்கே நிற்கின்ற நீரினை பருகி தாகம் தீர்த்து வருகிறது. தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் மணியாச்சி பள்ளம் நீரோடையில் தண்ணீர் செல்வது குறைந்தது.
இருப்பினும் ஆங்காங்கே தேங்கி நிற்கும் தண்ணீரை வனவிலங்குகள் குடித்து தாகம் தணித்து வருகின்றது. இந்த நிலையில் ஒற்றை யானை ஒன்று மணியாச்சி பள்ளம் நீரோடையில் தண்ணீர் குடிக்க வந்தது.
பின்னர் தண்ணீர் குடித்து விட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. அப்போது அந்த பகுதியில் உள்ள பாலத்தில் சென்ற சிலர் செல்போனில் படம் பிடித்தும் செல்பி எடுத்துக் கொண்டும் சென்றார்கள்.
கோடை காலம் தொடங்கி விட்டதால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் அவ்வப்போது சாலைகளில் நிற்பது அதிகரித்து உள்ளது. எனவே இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் செல்போனில் படம் எடுப்பது, செல்பி எடுப்பது ஆபத்தை விளைவிக்கும் வகையில் அமைந்துவிடும்.
எனவே இரவு நேரங்களிலும் பகல் நேரங்களிலும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.