என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
வடபழனியில் மூன்று கடையில் திருட்டு
Byமாலை மலர்15 July 2022 12:53 PM IST
- மளிகை கடை ஒன்றையும் உடைத்தும் கைவரிசை காட்டி பொருட்களை சுருட்டி உள்ளனர்.
- வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வடபழனி, அழகிரி நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் சுகுமார். அதே பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். இன்று அதிகாலை அவர் கடையை திறக்க வந்தபோது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்த போது கல்லாப்பெட்டியில் வைத்து இருந்த ரூ௩ ஆயிரம் ரொக்கம், சிகரெட் பாக்கெட்டுகளை கொள்ளையர்கள் அள்ளிசென்று இருந்தனர்.
இதேபோல் கோடம்பாக்கம் பாரதீஸ்வரர் காலனி பகுதியில் ஆனந்த் என்பவரது பெட்டி கடையை உடைத்து புகுந்த கொள்ளை கும்பல் அங்கிருந்து ஏராளமான ஜூஸ் பாட்டில்களையும் , இதேபோல் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றையும் உடைத்தும் கைவரிசை காட்டி பொருட்களை சுருட்டி உள்ளனர்.
இதுகுறித்து வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
X