search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நமது நாட்டை மதவாத நாடாக மாற்றுவதற்கு பா.ஜ.க. அரசு முயற்சி செய்கிறது- வேல்முருகன் குற்றச்சாட்டு
    X

    நமது நாட்டை மதவாத நாடாக மாற்றுவதற்கு பா.ஜ.க. அரசு முயற்சி செய்கிறது- வேல்முருகன் குற்றச்சாட்டு

    • நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக 5 சுங்கச்சாவடியை இழுத்து மூடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • இந்தியாவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் உள்ளிட்ட அனைத்து மதத்தினர் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்ததாவது:-

    இந்தியா என்பது பன்முகம் கொண்ட நாடாகும். இந்த நாட்டை மதவாத நாடாக மாற்றுவதற்கு பா.ஜ.க. அரசு முயற்சி செய்து வருகிறது.

    இந்த நிலையில் இந்தியாவில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தை பா.ஜ.க. அரசின் பிரதமர் மோடி தலைமையிலான அரசு குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதோடு, இறையாண்மை எதிர்காலத்தில் கேள்விக்குறியாகும். பாசிச நடவடிக்கை என்பது விஷ விதை மண்ணில் புதைப்பதாகவும், ஆகையால் இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக இதனை எதிர்க்க வேண்டும்.

    ஆகையால் மத்திய அரசு உடனடியாக இக்குழுவை திரும்பப் பெற வேண்டும். ஒற்றை ஆட்சி முறை பேராபத்தும் பெரிய அபாயத்தையும் விதைக்கிறது. கடந்த பத்தாண்டு காலமாக அதிமுகவினர் மிகப்பெரிய ஊழல் செய்து உள்ளனர். அதனை தற்காத்துக் கொள்வதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதனை ஆதரித்து உள்ளனர். அவர்கள் இந்தியாவை பாதுகாத்திட வேண்டும் என்ற அக்கறை இல்லாமல் சுயநலத்துடன் செயல்பட்டு வருகின்றனர். பா.ஜ.க. அரசு 7.5 லட்சம் கோடி மக்கள் வரிப்பணத்தை வீண் செய்துள்ளதாக இந்திய தணிக்கை துறை அறிக்கை சமர்ப்பித்து உள்ளது. இதில் தமிழகத்தில் 5 சுங்கசாவடியை சோதனை செய்தபோது சுமார் 128 கோடி கார்ப்பரேட் நிறுவனம் கொள்ளை அடித்திருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிய வந்துள்ளது.

    ஆகையால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக 5 சுங்கச்சாவடியை இழுத்து மூடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் உள்ளிட்ட அனைத்து மதத்தினர் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் ஒற்றுமையை கெடுக்கும் விதமாக சட்டம் உள்ளிட்ட எந்த நடவடிக்கை கொண்டு வந்தாலும், கொசு, காலரா ஒழித்தது போல் பாசிச தன்மையை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்து இருப்பதாக தெரிய வருகிறது.

    இவ்வாறு கூறினார்.

    பேட்டியின்போது மாநகராட்சி கவுன்சிலர் கண்ணன், மாவட்ட செயலாளர் ஆனந்த், கவுன்சிலர் அருள்பாபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×