என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
சேலம் அருகே இளம்பெண் பாலியல் பலாத்காரம்- வாலிபர் கைது
ByMaalaimalar20 July 2023 10:18 AM IST
- அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பெண்ணை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
- சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் கருப்பூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்றிரவு அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்றார். அந்த பெண் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரை உறவினர்கள் தேடினர்.
அப்போது அந்த பெண்ணை அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (31) என்பவர் முட்புதருக்குள் இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் புகார் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அந்த பெண்ணை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே மணிகண்டன் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
X