என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவேற்காட்டிற்கு அழைத்து சென்று 17 வயது கல்லூரி மாணவியை திருமணம் செய்த வாலிபர் கைது
- மாணவியின் பெற்றோர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
- பிரவீனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போரூர்:
திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் பகுதியை சேர்ந்த தம்பதிகளின் 17வயது மகள் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
மாணவிக்கு திருநின்றவூர் பகுதியை சேர்ந்த ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் வாலிபர் பிரவீன் (வயது20) என்பவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் நெருங்கி பழகி காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மகளின் காதல் விவகாரம் பற்றி தெரிந்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மாணவியை மதுரவாயல் சீமாத்தம்மன் நகர் பகுதியில் உள்ள அவரது மாமா வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் தனது காதலி மதுரவாயலில் உள்ள உறவினர் வீட்டில் இருப்பது தெரிந்து நேற்று காலை அங்கு சென்ற பிரவீன் மாணவியை வலுக்கட்டாயமாக தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி அழைத்து சென்று திருவேற்காடு கோவிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து பிரவீனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.