என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![பணகுடி அருகே டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் கொள்ளை பணகுடி அருகே டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் கொள்ளை](https://media.maalaimalar.com/h-upload/2023/04/16/1866606-robbery.webp)
X
பணகுடி அருகே டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் கொள்ளை
By
Suresh K Jangir16 April 2023 12:03 PM IST
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து, அங்கிருந்த சுமார் 450 மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
நெல்லை:
களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியை அடுத்த ராஜபுதூரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(வயது 47). இவர் தெற்கு வள்ளியூரில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபானக்கடையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு விற்பனையை முடித்துவிட்டு காவலாளியிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வீடு திரும்பினார். நள்ளிரவில் மதுக்கடைக்கு வந்த மர்ம கும்பல் அங்கு பணியில் இருந்த காவலாளியை சரமாரியாக தாக்கினர். பின்னர் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து, அங்கிருந்த சுமார் 450 மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றனர். அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 3 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து ராமகிருஷ்ணன் பணகுடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
Next Story
×
X