search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளியில்  ஆசிரியர் தின கொண்டாட்டம்
    X

    கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளியில் ஆசிரியர் தின கொண்டாட்டம்

    • ஆசிரியர் பணியின் சிறப்புகளையும், ஆசிரி யர்களின் அற்பணிப்பையும் பற்றி எடுத்துக் கூறினார்கள்
    • ஆசிரிய, ஆசிரியை களுக்கும் பள்ளியின் சார்பில் பரிசுகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர் .

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம் கம்பைநல்லூர் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீராம் கல்விக் குழுமத்தில் ஆசிரியர் தின விழா மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது .

    இதில் பள்ளியின் தாளாளர் வேடியப்பன், சாந்தி வேடியப்பன் விழாவை தொடங்கி வைத்து ஆசிரியர் பணி யின் சிறப்புகளையும், மாணவர்களின் நல னில் ஆசிரியர்களின் அற்பணிப்பையும் பற்றி எடுத்துக் கூறினார்கள் . இதனை தொடர்ந்து ஆசிரியர்களுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது .

    இதில் நிர்வாக இயக்குனர் தமிழ்மணி, பவானி தமிழ்மணி ஆகியோர் அனைத்து ஆசிரிய, ஆசிரியைகளுக்கும் பள்ளியின் சார்பில் பரிசுகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர் . மேலும் பள்ளியின் முதல்வர்கள் சாரதி, ஜான் இருதயராஜ், வெற்றிவேல் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் குருமூர்த்தி, புவனேஷ்வரி, மணிமேகலை, பிரவீணா ஆகியோர் விழா ஏற்பாடு களை செய்தனர்.

    Next Story
    ×