search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்
    X

    கூட்டத்தில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் பேசியபோது எடுத்த படம். அருகில் முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை உள்ளிட்ட பலர் உள்ளனர்.

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்

    • தகுதியானவர்கள் விடுபட்டிருந்தால் அவர்களை தேர்வு செய்து வருகிற 17-ந் தேதியன்று பொற்கிழி வழங்கப்படும்.
    • தெற்கு மாவட்ட அலுவலகமானது விரைவில் கலைஞர் அகடாமியாக செயல்படும்.

    தென்காசி:

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகமான சிவந்தி நகரில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.

    முன்னாள் மாவட்ட செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான செல்லத்துரை தலைமை தாங்கினார். இதில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெயபாலன் கலந்து கொண்டு பேசினார். செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி தொகுத்து வழங்கினார்.

    கூட்டத்தில் தென்காசி மாவட்ட தி.மு.க.சார்பில் கடந்த 5-ந் தேதி நடை பெற்ற கட்சியின் மூத்த முன்னோடி களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சிக்கும், மாவட்ட இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்திற்கும் அனுமதி பெற்று தந்த பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு நன்றி தெரிவித்தும், நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க.அலுவலகத்தை திறந்து வைத்து 70 அடி உயர கொடிக்கம்பத்தில் தி.மு.க. கொடியினை ஏற்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், நிகழ்ச்சிகள் நடைபெற முழு ஒத்துழைப்பு அளித்த அனைத்து நிர்வாகிகளுக்கும் இளைஞரணி அமைப்பா ளர்களுக்கும் நன்றி தெரிவித்தும், தென்காசி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அரசு கொறடாவுமான கதிரவனின் மனைவி மல்லிகா கதிரவனுக்கு பாவேந்தர் விருது வழங்க பரிந்துரை செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு நன்றி தெரிவித்தும், வருகிற 17-ந் தேதி தி.மு.க. முப்பெரும் விழாவினை சிறப்பாக கொண்டாடிடவும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பாடுபடுவோம் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தொடர்ந்து தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் பேசியதாவது:-

    கடந்த 5-ந் தேதி 1,500 பேருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் வழங்கப்பட்ட மூத்த முன்னோடி களுக்கான பொற்கிழி வழங்கியதில் தகுதியானவர்கள் விடுபட்டிருந்தால் அவர்களை தேர்வு செய்து வருகிற 17-ந் தேதியன்று தெற்கு மாவட்ட அலுவலகத்தில் வைத்து வழங்கப்படும். இந்த தெற்கு மாவட்ட அலுவலகமானது காலை 9 மணி முதல் 11 மணி வரை செயல்படும் என்றும் விரைவில் இது கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் 4 ஆசிரியர்களை கொண்டு கலைஞர் அகடாமியாக செயல்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர்கள் ஜேசு ராஜன், ஷேக் தாவூத், ராஜேஸ்வரன், சாமிதுரை, மாவட்ட பொருளாளர் ஷெரிப், மாநில விவசாய அணி இணை அமைப்பாளர் செல்லப்பா, கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரகுமான், ஆலங்குளம் ஒன்றிய குழுத் தலைவி திவ்யா மணிகண்டன், மாவட்ட துணை செய லாளர் கென்னடி, கனி மொழி, தென்காசி தெற்கு மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர் மாரிமுத்து, தொண்டரணி அமை ப்பாளர் இசக்கி பாண்டியன், தென்காசி தெற்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் அன்பரசன், மாணவர் அணி அமைப்பாளர் ரமேஷ், செங்கோட்டை நகர செயலாளர் வெங்க டேசன், தி.மு.க. பேரூர் செயலாளர்கள் மேலகரம் சுடலை, குற்றாலம் குட்டி, முன்னாள் பேரூர் செயலாளர் சாம்பவர் வடகரை மாறன், குற்றாலம் சுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் அழகு சுந்தரம், வக்கீல்கள் அணி வேல்சாமி ரகுமான் சாதத், முத்துக்குமாரசாமி, சீனித்துரை, ரவிசங்கர், மகேஷ் மாயவன், பெரிய துரை, மாவட்ட பொறியாளர் அணி தலைவர் தங்கப்பாண்டியன், நகர துணை செயலாளர் ராம் துரை, குத்துக்கல்வலசை கிளை செயலாளர் காசி கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா நன்றி கூறினார்.

    Next Story
    ×