search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் கல்வியின் முக்கியத்துவத்தினை  தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
    X

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    பெண் கல்வியின் முக்கியத்துவத்தினை தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

    • பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
    • ஏழை மக்களிடையே பெண் கல்வியின் முக்கியத்துவத்தினை தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் " பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி பேசும்போது தெரிவித்ததாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் 15 வது நிதிக்குழு மூலம் 2022 – 23 ஆம் நிதியாண்டிற்கான " பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற திட்டத்தினை இம்மாவட்டத்தில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்படுத்த பெண்குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்த மக்களிடையே துறை வாரியாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் எனவும் தருமபுரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.30 இலட்சம் நிதி ஒதுக்கீட்டினை சழூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கல்வித்துறை, மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை, காவல் துறைக்கு என நிதி ஒதுக்கீடு துறை ரீதியாக பிரித்து வழங்கப்படும் என்றும் அதற்கான செயல் திட்ட அறிக்கையினை செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும், தருமபுரி மாவட்டத்தின் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதே இதன் மிக முக்கிய நோக்கமாகவும், மற்றும் மிகவும் பின்தங்கிய குடும்பத்தினர், ஏழை மக்களிடையே பெண் கல்வியின் முக்கியத்துவத்தினை தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜான்சிராணி, முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், பழங்குடியினர் நலன் மற்றும் ஆதிதிராவிடர் நல அலுவலர் கண்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

    Next Story
    ×