என் மலர்
உள்ளூர் செய்திகள்
கோவளம் கடற்கரையில் குப்பைகளை அகற்றிய மத்திய மந்திரி
- கடற்கரையை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூய்மையான கடல் பாதுகாப்பான கடல் என்ற இயக்கம் தொடங்கப் பட்டுள்ளது. 75 நாட்கள் நடைபெற உள்ள இந்த இயக்கம் தமிழகத்தில் உள்ள எட்டு கடற்கரை பகுதிகளை உள்ளடக்கி 75 கடற்கரைப் பகுதிகளில் நிகழ்த்தப்பட உள்ளது.
இதன் ஒரு பகுதியாக "சுத்தமான கடல் பாதுகாப்பான கடல்" என்ற பிரச்சாரத்தை முன்னிறுத்தும் விதமாக கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்னையை அடுத்த மாமல்லபுரம் செல்லும் வழியில் உள்ள கோவளம் கடற்கரையில் இன்று குப்பைகளை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி டாக்டர் ஜிஜேந்திர சிங் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மருத்துவர்கள், அறிவியலாளர்கள், மாணவர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட அமைச்சர், கடற்கரையை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பிரதமர் மோடியின் அறைகூவலால் ஈர்க்கப்பட்டு இல்லம்தோறும் தேசியக் கொடி ஏற்றும் கொண்டாட்டங்களில் பங்கேற்க கோவளம் கடற்கரைப் பகுதிக்கு வந்ததாக அமைச்சர் தெரிவித்தார். தேசியக் கொடியினை ஏற்றி கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.