search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முல்லைப்பெரியாறு, வைகை அணைகளின் நீர் மட்டம் கணிசமாக உயர்வு
    X

    முல்லைப்பெரியாறு, வைகை அணைகளின் நீர் மட்டம் கணிசமாக உயர்வு

    • இடுக்கி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பெரியாறு அணைக்கு நீர் வரத்து தொடங்கியது.
    • பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணையின் நீர் மட்டமும் கணிசமாக உயர்ந்தது.

    கூடலூர்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியதால் முல்லை ப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து குறைந்து கொண்டே வந்தது. கடந்த வாரம் இடுக்கி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பெரியாறு அணைக்கு நீர் வரத்து தொடங்கியது. 115 அடியில் இருந்த அணையின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 120 அடியை எட்டியது.

    ஆனால் தற்போது மழையின் தாக்கம் குறைந்து ள்ளதால் அணையின் நீர் மட்டம் மேலும் உயருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதே போல் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணையின் நீர் மட்டமும் கணிசமாக உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 50.13 அடியாக உள்ளது.

    பெரியாறு அணையின் நீர் மட்டம் 120 அடியாக உள்ளது. வரத்து 778 கன அடி. திறப்பு 356 கன அடி. இருப்பு 2628 மி.கன அடி. 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 50.13 அடியாக உள்ளது. வரத்து 94 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 2010 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 49.95 அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 80.36 அடியாக உள்ளது. வரத்து 1 கன அடி. திறப்பு 3 கன அடி.

    பெரியாறு 1.2, தேக்கடி 1.6, கூடலூர் 1.6, உத்தம பாளையம் 1.2, சண்முகாநதி அணை 1.8, போடி 2.6 வைகை அணை 4, சோத்து ப்பாறை 3.5, மஞ்சளாறு 9.8, பெரியகுளம் 9, வீரபாண்டி 3.4, அரண்மனைபுதூர் 8, ஆண்டிபட்டி 7.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    Next Story
    ×