search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில் கனமழை கொட்டியது
    X

    தருமபுரியில் கனமழை கொட்டியது

    • மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே மாலை நேரத்தில் காற்று இடியுடன் கூடிய மழை பெய்து வந்தது.
    • ஒகேனக்கல், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழை பொழிந்துள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் கோடைக்கு முன்பே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்தது. கோடை காலம் தொடங்கிய முதல் வெயில் வாட்டி வதைத்து வருவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தங்கள் பணி நேரத்தை குறைத்து சிலர் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கடுமையான வெப்பச்சலனத்தால் தருமபுரி மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே மாலை நேரத்தில் காற்று இடியுடன் கூடிய மழை பெய்து வந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு ஒகேனக்கல், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழை பொழிந்துள்ளது. ஒகேனக்கல் 4.2 மில்லி மீட்டர் மழையும், அரூர் 12.2 மில்லி மீட்டர் மழையும், பாப்பிரெட்டிப்பட்டியில் 25 மில்லி மீட்டர் மழையும், என மாவட்டத்தில் மொத்தம் 41.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    Next Story
    ×