search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையை மறித்து யாரை மகிழ்விக்க இந்த கார் பந்தயம் -சீமான் கண்டனம்
    X

    சாலையை மறித்து யாரை மகிழ்விக்க இந்த கார் பந்தயம் -சீமான் கண்டனம்

    • சென்னை தீவுத்திடல், அண்ணா சாலையில் கார் பந்தயம் நடத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது.
    • ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் அளவிற்கு ஒரு வீரரை கூட தமிழகத்தில் உருவாக்கவில்லை.

    சென்னை:

    F4 கார் பந்தயத்திற்கான டிக்கெட் விற்பனையை தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.

    சென்னையில் வரும் ஆகஸ்ட் 31, செம்டம்பர் 1 ஆகிய தேதிகளில் ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் என்ற பெயரில் இரவு கார் பந்தயம் நடைபெற உள்ளது. இதனை காண்பதற்காக டிக்கெட்களை Paytm இன்சைடரில் உரிய கட்டணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் அவசியம் தானா என்று நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது குறித்து சீமான் கூறியவாதவது:-

    சென்னை தீவுத்திடல், அண்ணா சாலையில் கார் பந்தயம் நடத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது. இருங்காட்டு கோட்டை, சோழவரத்தில் உள்ள பந்தயத்திடலில் நடத்தலாம். மக்கள் பயணிக்கும் சாலையை மறித்து யாரை மகிழ்விக்க இந்த கார் பந்தயம்.

    ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் அளவிற்கு ஒரு வீரரை கூட தமிழகத்தில் உருவாக்கவில்லை. பகட்டுக்காக, பொழுதுபோக்கிற்காக கார்பந்தயம் நடத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும்.

    மாநிலத்தில் போராடி வரும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற நிதி இல்லை.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த மாநில அரசிடம் நிதி இல்லை. மின்சார வாரிய கடனை அடைக்க மின் கட்டணத்தை உயர்த்தும் சூழலில் கார் பந்தயம் தேவையா. மாதம் ரூ.1000 கொடுத்தால் தான் வாழ முடியும் என்ற வறுமை சூழலில் மக்களை வைத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×