என் மலர்
உள்ளூர் செய்திகள்

குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது

- தனிப்படை போலீசார் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
- தனிப்படை போலீசார் குடோனிலிருந்து 274 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக நகர போலீஸ் கமிஷனர் பிரபாகரனுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கமிஷனர் பிரபாகரன் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை ஒதுக்கி வைத்திருப்பவ ர்களை கண்டறிய ஒரு தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர் இந்நிலையில் தெற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான பல்லடம் சாலை சந்தப்பேட்டை அருகில் உள்ள குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதை பொருள் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலை யடுத்து விரைந்து சென்ற தனிப்படை போலீசார் குடோனிலிருந்து 274 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் போதை பொருளை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த வெங்கடேசன், ஈரோடு பகுதியைச் சார்ந்த தளராம் இரண்டு பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்க்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களிலும் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் இருக்கிறதா என்பதை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.