என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![ஏ.டி.எம்.மையத்தில் பேட்டரி திருடிய 3 பேர் கைது ஏ.டி.எம்.மையத்தில் பேட்டரி திருடிய 3 பேர் கைது](https://media.maalaimalar.com/h-upload/2022/08/04/1740784-untitled-1.jpg)
X
பேட்டரி திருடியவர்களை படத்தில் காணலாம்.
ஏ.டி.எம்.மையத்தில் பேட்டரி திருடிய 3 பேர் கைது
By
மாலை மலர்4 Aug 2022 12:48 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இரண்டு பேட்டரிகளை திருடி ஆட்டோவில் ஏற்றியுள்ளனர்.
- பொதுமக்கள் பேட்டரி திருடியவர்களை பிடித்து பெருமாநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர்.
பெருமாநல்லூர் :
பெருமாநல்லூர் நால்ரோட்டில் தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்திற்கு நேற்று பயணிகள் ஆட்டோவில் 3 ஆசாமிகள் வந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த இரண்டு பேட்டரிகளை திருடி ஆட்டோவில் ஏற்றியுள்ளனர். இதனை பார்த்த பொதுமக்கள் அவர்களை பிடித்து பெருமாநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கோவையை சேர்ந்த செந்தில்குமார் (வயது 41), திருப்பூர் சத்யாநகரை சேர்ந்த ஹக்கீம் (34), மங்கலம் சாலையை சேர்ந்த முகமது யூசுப் (31) என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிமிருந்து ரூ.30 ஆயிரம் மதிப்பிலான இரண்டு பேட்டரிகள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்–த–னர்.
Next Story
×
X