search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவிலில் மது, புகையிலை விற்ற 4 பேர் கைது
    X

    கோப்புபடம்

    வெள்ளகோவிலில் மது, புகையிலை விற்ற 4 பேர் கைது

    • போலீசார் நேற்று காலை முத்தூர் மற்றும் வெள்ளகோவில் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் போலீசார் நேற்று காலை முத்தூர் மற்றும் வெள்ளகோவில் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது முத்தூர் அருகே உள்ள வரட்டுகரை என்ற இடத்தில் அரசு அனுமதி இன்றி மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த அவிநாசி பகுதியை சேர்ந்த மனோஜ் குமார் (வயது 28) வெள்ளகோவில், கரூர் ரோட்டில் ஒரு தனியார் மது பார் அருகே மது பாட்டில்களை விற்பனை செய்த ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (31) ஓலப்பாளையம் டாஸ்மாக் மதுபான கடை அருகே மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த தேவராஜ் (22) ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 20 மது பாட்டில்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதே போன்று வெள்ளகோவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஓலப்பாளையம் அருகே உள்ள கொழிஞ்சிகாட்டுவலசு என்ற இடத்தில் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த மாரிமுத்து (60) என்பவரை கைது செய்து கடையில் இருந்த புகையிலை பாக்கெட்டுகளை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×