என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை ஓரம் நின்று பேருந்துக்காக காத்துருந்த பொது மக்களை படத்தில் காணலாம்.
உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகப்பகுதியில் பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
- நாள்தோறும் பல்வேறு தேவைகளுக்காக உடுமலை ஒன்றிய அலுவலகத்திற்கு பல்வேறு கிராம மக்கள் வந்து செல்கின்றனர்.
- பல ஆண்டு காலமாக சாலை ஓரம் நின்று பஸ்சில் ஏறி வருகின்றனர்.
உடுமலை :
உடுமலை நகராட்சிக்கு ட்பட்ட 29 வது வார்டு பகுதியில் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ளன. மேலும் அந்த பகுதியில் இ.எஸ்.ஐ மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் அதிக அளவு உள்ளன. இந்த நிலையில் நாள்தோறும் பல்வேறு தேவைகளுக்காக உடுமலை ஒன்றிய அலுவலகத்திற்கு பல்வேறு கிராம மக்கள் வந்து செல்கின்றனர். இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு மாதந்தோறும் மாத்திரைகள் வாங்குவதற்கும் தினமும் சிகிச்சைக்காகவும் பலர் தினம் வந்து செல்கின்றனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில்:-
இந்த பகுதிக்கு அடிப்படை தேவைகளுக்காக வந்து செல்லும் பொதுமக்களுக்கு பேருந்துக்காக காத்திருக்க வேண்டிக்கும்போது தளி சாலையில் பஸ் நிறுத்தம் அமைக்கப்படாத காரணத்தால் பல ஆண்டு காலமாக சாலை ஓரம் நின்று பஸ்சில் ஏறி வருகின்றனர். இதனால் ஒரு சில நேரங்களில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மழை, வெயில் காலங்களில் அருகில் உள்ள கடைகளில் ஒதுங்கி நிற்க வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் ஆக்கிரப்பு குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு அவற்றை அகற்றி பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்தும் தற்பொழுது வரை பேருந்து நிறுத்த அமைக்கப்படவில்லை.ஆகையால் சம்பந்தப்பட்ட உடுமலை நகராட்சி நிர்வாகம் இப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டு உடனடியாக பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.