என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
மைவாடி கிராமத்தில் கல்குவாரி அமைப்பது குறித்த கருத்து கேட்பு கூட்டம் அடுத்த மாதம் 16 -ந் தேதி நடக்கிறது
Byமாலை மலர்27 Nov 2022 1:13 PM IST
- குவாரி அமைப்பது தொடா்பாக கருத்துகேட்பு கூட்டம் சில மாதங்களுக்கு முன்பாக நடைபெறவிருந்த நிலையில், நிா்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.
- ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டிசம்பா் 16ந் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
மடத்துக்குளம் அருகே உள்ள மைவாடி கிராமத்தில் கல்குவாரி அமைப்பது தொடா்பாக கருத்துகேட்பு கூட்டம் டிசம்பா் 16 -ந் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
திருப்பூா் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் மைவாடி கிராமத்தில் சாதாரண கற்கள் மற்றும் குவாரி அமைப்பது தொடா்பாக பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடைபெறவிருந்த நிலையில், நிா்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், குவாரி அமைப்பது தொடா்பாக பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டிசம்பா் 16ந் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
X