என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
அவினாசி தூய்மைப்பணியாளர்களுக்கு பரிசு
- காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைபணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
அவினாசி:
சுதந்திர தினத்தை முன்னிட்டு அவினாசி பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து பேரூராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி தேசிய கொடியேற்றிவைத்தார்.
இதையடுத்து பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைபணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் செயல் அலுவலர் ராமலிங்கம், துணைத்தலைவர் மோகன், வார்டு உறுப்பினர்கள், துப்புரவு ஆய்வாளர் கருப்புசாமி, பேரூராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
Next Story