search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுதானிய உணவு குறித்து  பள்ளி  மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை
    X

    கோப்புபடம்

    சிறுதானிய உணவு குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை

    • உடல் ஆரோக்கியத்துக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த வேண்டிய அவசியம்
    • 7 நாட்களாக பள்ளி, கல்லூரிகளில் சிறு தானியங்களின் விழிப்புணர்வு, மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    உடல் ஆரோக்கியத்துக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த வேண்டிய அவசியம், தற்போதைய காலகட்டத்தில் ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவாக தான் இந்தாண்டை சிறுதானிய ஆண்டாக ஐ.நா.,சபை அறிவித்துள்ளது. கடந்த 7 நாட்களாக பள்ளி, கல்லூரிகளில் சிறு தானியங்களின் விழிப்புணர்வு, மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

    விழிப்புணர்வு மட்டும், பலன் தருமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பள்ளி மாணவ, மாணவிகள் அளவில் சிறு தானியங்களின் பயன்பாட்டை அதிகப்படுத்த வேண்டியது அவசியம் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர் மத்தியில், சிறுதானியங்கள் பயன்பாடு அதிகப்படுத்த வேண்டும். பள்ளி மேலாண்மை குழுவினர் மாணவர்களுக்கு சிறு தானிய உணவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

    Next Story
    ×