என் மலர்
உள்ளூர் செய்திகள்
அவினாசியில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்
- பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
- அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பு.
அவினாசி :
எடப்பாடி பழனிச்சாமி நடத்திய அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பு வழங்கியதையடுத்து அவினாசி அவினாசிலிங்கம்பாளையம் நால்ரோடு பிரிவில் அவினாசி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் மு.சுப்பிரமணியம் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இதே போல் அவினாசியிலும் அ.தி.மு.க சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது. பழங்கரை கூட்டுறவு சங்கத் தலைவர் தனபால்,பழங்கரை ஊராட்சி முன்னாள் தலைவர் செந்தில்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பழங்கரை ஊராட்சி வார்டு உறுப்பினர் சண்முகம், ஜெயலலிதா பேரவை ஒன்றிய தலைவர் அண்ணா பூபதி, ஒன்றிய செயலாளர் தம்பி ராஜேந்திரன், தெற்கு ஒன்றிய பொருளாளர் காவேரி ரமேஷ், ஒன்றிய துணை செயலாளர் முத்துசாமி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் வி.பி.நடராஜ், அமைப்புசாரா ஓட்டுனர் அணி ஒன்றிய செயலாளர் சுந்தர் உள்ளிட்ட அ.தி.மு.க. கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.