என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
விவசாய தின கருத்தரங்கு
- மக்கள் தொகையில் 60 சதவீதத்திற்கு மேலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களில் தான் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஒரு நாடு வளர்ச்சி அடைய விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது.
திருப்பூர் :
தேசிய விவசாய தினத்தை (கிசான் திவாஸ்) முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு - 2 சார்பில், விவசாய தின கருத்தரங்கு நடந்தது.பேராசிரியர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார்.
இதில் திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் மாரியப்பன் பேசுகையில், உலக அளவில் உணவு தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலையில் எதிர்காலம் விவசாயிகள் கையில் தான் உள்ளது என்பதை வலியுறுத்தவும், உணவு பாதுகாப்பை வலியுறுத்தவும் டிச., 23ந் தேதி விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் இன்று மக்கள் தொகையில் 60 சதவீதத்திற்கு மேலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களில் தான் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயம் ஒவ்வொரு நாட்டின் முதுகெலும்பு, ஒரு நாடு வளர்ச்சி அடைய விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது, மனிதனாக பிறந்த நமக்கு பசி என்ற உணர்வு இருக்கின்ற வரையில் விவசாயம் அழியாது என்றார்.