என் மலர்
உள்ளூர் செய்திகள்

பல்லடத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
- போதைப் பழக்கமானது உடல் நலத்துக்கும், சமூக நலத்துக்கும் தீங்குவிளைவிக்கக்கூடியதாகும்.
- போதைப் பொருள்களை பயன்படுத்தாதபடி விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
பல்லடம் ;
பல்லடம் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில் பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி தலைமை வகித்து பேசியதாவது:- மாணவா்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகாமல் கல்வியில் மட்டுமே கவனத்தை செலுத்த வேண்டும். போதைப் பழக்கமானது உடல் நலத்துக்கும், சமூக நலத்துக்கும் தீங்குவிளைவிக்கக்கூடியதாகும்.
இதனால் தனி மனிதன் மட்டுமின்றி அவா் சாா்ந்த சமுதாயமும் பாதிக்கப்படுகிறது. நீங்கள் போதை என்ற தவறான பழக்கத்தில் மாட்டிக்கொள்ளவேண்டாம். அதே வேளையில், குடும்ப உறுப்பினா்கள், நண்பா்கள் உள்பட யாரும் போதைப் பொருள்களை பயன்படுத்தாதபடி விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் நீதிபதி சித்ரா, வக்கீல் மார்ட்டின் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.