என் மலர்
உள்ளூர் செய்திகள்
வெப்பநிலை அதிகரிப்பால் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டுகோள்
- 21,22,23 ஆகிய மூன்று நாட்கள், வெப்பநிலை புதிய உச்சத்தை தொடலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
- வயதானவர்கள், குழந்தைகள் மதிய நேரங்களில் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.
தாராபுரம் :
வெப்பநிலை அதிகரிப்பால் 21,22,23 ஆகிய தேதிகளில் முறையே 2,3,4 மி.மீ., மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, கோவை வேளாண் பல்கலைக்காக காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. இது குறித்து அந்த மையத்தின் தலைவர் ராமநாதன் கூறியதாவது:- பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள எல் நீனோ நிகழ்வு காரணமாக நாடு முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.அக்னி நட்சத்திரம் சமயங்களில் வழக்கமாக, 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும். தற்போது, 40 டிகிரி செல்சியஸ் எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
21,22,23 ஆகிய மூன்று நாட்கள், வெப்பநிலை புதிய உச்சத்தை தொடலாம் என கணிக்கப்பட்டுள்ளது. 23ந் தேதி இதுகுறித்த பதிவுகள் உறுதிசெய்யப்படும்.வயதானவர்கள், குழந்தைகள் மதிய நேரங்களில் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. அதிகமாக நீர் பருக வேண்டும். அடுத்த ஐந்து நாட்களுக்கு வறண்ட வானிலையுடன், சராசரியை காட்டிலும் 2-3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்து காணப்படும்.மதியம் 12 மணி முதல்4 மணி வரை கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்புவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
பகல், இரவு வெப்பநிலை உயர்ந்தும், காற்றின் ஈரப்பதம் குறைந்தும் காணப்படுவதால் மதியம் 2மணி முதல் 3 மணி வரை உள்ளூர் பகுதிகளில் சுழற்காற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஐந்து மாத வயதுடைய வாழை மரங்களுக்கு முட்டு கொடுப்பது நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.