என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாரதிபுரம் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு
    X

    பாரதிபுரம் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு

    • இடுவாய் ஊராட்சி பாரதிபுரம் நடுநிலைப் பள்ளி தமிழகத்தின் சிறந்த பள்ளிகளில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டதையொட்டி வாழ்த்து தெரிவிக்கும் விழா நடைபெற்றது.
    • விழாவில் வாழ்த்தி பேச வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் ஒன்றியம் இடுவாய் ஊராட்சி பாரதிபுரம் நடுநிலைப் பள்ளி தமிழகத்தின் சிறந்த பள்ளிகளில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டதையொட்டி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக பள்ளியில் பயிற்றுவிக்கும் தலைமை ஆசிரியர் உட்படஅனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் விழா நடைபெற்றது.

    பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு வந்திருந்தவர்களை தலைமை ஆசிரியர் காளீஸ்வரி சுப்பிரமணியம் வரவேற்று பேசினார்.இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உப தலைவர் எஸ். பரமசிவம் , திருப்பூர் நிலவள வங்கி இயக்குனர் கே.ஈஸ்வரன், இடுவாய் ஊராட்சியின் முன்னாள் உப தலைவர் எஸ் சொக்கப்பன் ,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கணேசன், மணி, பூவதிபிரகாஷ் , கூட்டுறவு சங்க இயக்குனர் இந்திராணி , வள்ளுவர் நகர் சின்ராஜ் , பள்ளி மாணவ மாணவிகள் , பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    தலைமையாசிரியர் காளீஸ்வரி சுப்பிரமணியம் , உடன் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பள்ளி ஊழியர்களுக்கும் ஊராட்சி தலைவர் கணேசன் , விழாவில் வாழ்த்தி பேச வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். பள்ளியின் முடிவில் துணை தலைமை ஆசிரியர் நன்றி தெரிவித்தார்.

    Next Story
    ×