என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
அவினாசி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா16-ந் தேதி தொடங்குகிறது
Byமாலை மலர்13 Feb 2023 4:48 PM IST
- 20-ந் தேதி காலை 7 மணியளவில் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.
- 18-ந் தேதி கொடியேற்றமும், 19-ந் தேதி காலை அலகு தரிசனம் ஆகியவை நடைபெறுகிறது.
அவினாசி :
அவினாசி காந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு 20-ந் தேதி குண்டம் திருவிழா நடைபெற உள்ளது. முன்னதாக 16-ந் தேதி அம்மன் சாட்டு விழா, 18-ந் தேதி கொடியேற்றமும், 19-ந் தேதி காலை அலகு தரிசனம் ஆகியவை நடைபெறுகிறது.
20-ந் தேதி காலை 7 மணியளவில் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு ரிஷப வாகன காட்சியும், 21-ந் தேதி பரிவேட்டை தெப்பத்தேர் நிகழ்ச்சி, 22-ந் தேதி மஞ்சள் நீர் விழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் அங்காளபரமேஸ்வரி அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.
Next Story
×
X