என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![காங்கேயத்தில் சாலை மறியல் செய்த பா.ஜ.க.வினர் கைது காங்கேயத்தில் சாலை மறியல் செய்த பா.ஜ.க.வினர் கைது](https://media.maalaimalar.com/h-upload/2022/11/03/1786047-untitled-1.jpg)
X
சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர்.
காங்கேயத்தில் சாலை மறியல் செய்த பா.ஜ.க.வினர் கைது
By
மாலை மலர்3 Nov 2022 1:46 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சென்னையில் நடந்த ஆர்பாட்டத்தில் பா. ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார்.
- சாலை மறியலில் ஈடுபட்ட 250 பேரை போலீசார் கைது செய்தனர்.
காங்கேயம் :
பெண்கள் குறித்து ஆபாசமாக பேசிய தி.மு.க., பேச்சாளரை கைது செய்ய கோரி சென்னையில் நடந்த ஆர்பாட்டத்தில் பா. ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து காங்கேயம் நகர, ஒன்றிய பா.ஜ.க.வினர் காங்கேயம் பஸ் நிலைய ரவுண்டானா அருகே நகரத் தலைவர் சிவபிரசாத் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதில் திருப்பூர் தெற்கு மாவட்ட துணைத்தலைவர் கலாநடராஜன் மற்றும் சித்ரா மணிகண்டன் உள்ளிட்ட சுமார் 250 பேர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
X