என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் மங்கலம் என்.ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய காட்சி.
வெள்ளகோவிலில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
- திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்களம் என்.ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
- ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவிலில் நேற்று மாலை வெள்ளகோவில் நகர பாஜக. நகர தலைவர் அருண்குமார் தலைமையில் பால் விலை, மின்சார கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர், இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்களம் என்.ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர்தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகன் குமார், மாவட்ட நெசவாளர் பிரிவு தலைவர் சௌந்தரராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் குணமூர்த்தி, திருப்பூர் தெற்கு மாவட்ட மகளிர் அணி துணை தலைவர் சித்ரா, நகர பொருளாளர் ரத்தினசாமி, நகர பொதுச்செயலாளர்கள் நல்லசாமி, செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். வெள்ளகோவில் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் நேற்று காலை புதுப்பையில் தெற்கு ஒன்றிய தலைவர் கே.ராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.இதில் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.