என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
காலை உணவு திட்டம் அரசு பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு
- சமையல் செய்வதற்கான ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருப்பதற்கும் பள்ளி நிர்வாகங்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
- புதிய கல்வியாண்டில் இந்த திட்டம் எந்த முறையில் செயல்படுத்தப்படும் என்பது தெரியவில்லை.
உடுமலை :
புதிய கல்வியாண்டு 2023 - 24 முதல் துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.ஏற்கனவே குறிப்பிட்ட மாவட்டங்களில் சில பள்ளிகளில் இத்திட்டம் சோதனை முயற்சியாக நடப்பு கல்வியாண்டில் செயல்படுகிறது.
இதன் அடிப்படையில் உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறித்து விபரங்கள் அவ்வப்போது சமர்ப்பிக்க கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி வருகிறது.தற்போது கூடுதலாக பள்ளிகளில் சமையலறை கட்டமைப்புக்கு புதிதாக வண்ணம் பூசியும், சமையல் செய்வதற்கான ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருப்பதற்கும் பள்ளி நிர்வாகங்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:- புதிய கல்வியாண்டில் இந்த திட்டம் எந்த முறையில் செயல்படுத்தப்படும் என்பது தெரியவில்லை.ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆய்வு நடத்தி சிதிலமடைந்த நிலையில் இருக்கும் சமையலறைகள் புதுப்பிக்கப்பட்டும் இடவசதி இல்லாத பள்ளிகள் குறித்தும் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது.குறிப்பிட்ட பள்ளிகளை ஒருங்கிணைத்து, ஒரு சத்துணவு மையத்தில் காலை உணவு செய்யப்படுமா அல்லது அந்தந்த பள்ளிகளில் மையம் செயல்படுமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.மே மாதம் திட்டத்துக்கான முழு ஏற்பாடுகளும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.