என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கொங்கணகிரி முருகன் கோவிலில் தேரோட்டம் கொங்கணகிரி முருகன் கோவிலில் தேரோட்டம்](https://media.maalaimalar.com/h-upload/2023/06/03/1891787-untitled-1.webp)
அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்த காட்சி.
கொங்கணகிரி முருகன் கோவிலில் தேரோட்டம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
- வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் மலா் அலஙகாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பூர் :
வைகாசி விசாகத்தையொட்டி திருப்பூர் கொங்கணகிாி முருகன் கோவிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் நேற்று காலை மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடா்ந்து வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் மலா் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தா்கள் காலை முதல் நீண்ட வாிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
மதியம் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் தோில் எழுந்தருளினார். மாலை 5 மணிக்கு அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க பின்னால் இருந்து டிராக்டர் தேரை நகர்த்தியது. தேர் கோவிலை சுற்றிவந்து நிலையை அடைந்தது. தேரோட்டம் முடிந்தவுடன் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.