என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
அவினாசி - சேவூர் ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போன் பறிப்பு
Byமாலை மலர்21 Aug 2023 3:56 PM IST
- மோட்டார் சைக்கிளில் வந்த நபர் சரண்யாதேவி கையில் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றார்.
- புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அவினாசி:
திருப்பூர் முத்தனம்பாளையத்தை சேர்ந்த மணிமுத்து மனைவி சரண்யா தேவி(வயது 42) .இவர் நேற்று பிற்பகல் அவினாசி சேவூர் ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது இவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் சரண்யாதேவி கையில் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றார்.
பதறிப்போன அவர் திருடன், திருடன் என்று சத்தம் போட்டதால் அப்பகுதியில் இருந்த சிலர் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை பிடிக்க முயன்றனர். இருப்பினும் அந்த நபர் மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
X