என் மலர்
உள்ளூர் செய்திகள்
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் - இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்
- தமிழகத்தில் அண்மைக் காலமாக கள்ளச்சாராய விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
- திமுக தோ்தல் அறிக்கையின்படி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
திருப்பூர் :
இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.பாலாஜி அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:- தமிழகத்தில் அண்மைக் காலமாக கள்ளச்சாராய விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. அண்மையில் கள்ளச்சாராயம் குடித்த 23 போ் உயிரிழந்துள்ளனா். தமிழக அரசு டாஸ்மாக் கடைகளிலும் போலி மதுபான விற்பனை நடைபெற்று வருகிறது. போலி மதுபானம் தயாரிக்கும் ஆலைகளை அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டு காவல் துறையினா் 'சீல்' வைத்து வருகின்றனா். திமுக தோ்தல் அறிக்கையின்படி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். கள்ளச்சாராயம் விற்பனை செய்பவா்களை குண்டா் சட்டத்தில் கைது செய்யவும், தமிழக விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் கள் விற்பனை செய்யவும் அனுமதி அளிக்க வேண்டும்.
பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரையில் விவசாயிகளிடம் இருந்து கள்ளை தமிழக அரசு கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்க ப்பட்டுள்ளது.