என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
அதிக புரோட்டீன் உணவு சாப்பிட்டால் ஆபத்து - டாக்டர்கள் எச்சரிக்கை
- ஒரு கிலோ எடைக்கு தினமும், 1.5 கிராம் புரோட்டீன் போதும்.
- உடற்பயிற்சி செய்வோருக்கு புரோட்டீன் மிக அவசியம்.
குடிமங்கலம் :
சிக்ஸ் பேக்ஸ்' உடலுக்காக இன்றைய இளைஞர்கள் தங்களை வருத்திக் கொள்ள தயங்குவதில்லை.இதற்காக மணிக்கணக்கில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்கின்றனர்.தசைகளை சிறந்த முறையில் வலுப்பெற செய்ய, புரோட்டீன் சார்ந்த மருந்துகள் எடுத்துக் கொள்கின்றனர்.
இது பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் டாக்டர்கள். இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:- வயது மற்றும் எடைக்கு ஏற்ப தேவையான அளவு புரோட்டீனை எடுத்துக்கொ ண்டால் போதும்.ஒரு கிலோ எடைக்கு தினமும், 1.5 கிராம் புரோட்டீன் போதும். அதாவது ஒருவரின் எடை 50 கிலோ எனில் 75 கிராம் புரோட்டீன் போதும்.தொடர்ச்சியாக, உடற்பயிற்சி செய்வோருக்கு புரோட்டீன் மிக அவசியம். எளிதாக தசையை வலுப்பெற வைக்க உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் அதற்கு பின்னரும் ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவு முறையை பின்பற்ற வேண்டும். இத்துடன் சிறிது கார்போ ஹைட்ரேட், கொழுப்பு கொண்ட உணவு சாப்பிடலாம். தேவையின்றி அதிக புரோட்டீன் உட்கொள்ளும் போது சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.நாம் உண்ணும் உணவிலேயே புரோட்டீன் உள்ளது. காய்கறிகளில் புரோட்டீன் உள்ளவற்றை சாப்பிடலாம்.இதனால் எவ்வித பிரச்னையும் இல்லை. மாறாக அதிக புரோட்டீன் உள்ள உணவு உட்கொள்ளும் போது உடற்பயிற்சி செய்தாலும், செய்யாவிட்டாலும், சிறுநீரகம் பாதிப்படைவது உறுதி. உடற்பயிற்சி செய்பவர்கள் அதிக புரோட்டீன் தேவை என ஒரு சில புரோட்டீன் பவுடர்களை எடுத்துக் கொள்கின்றனர்.
இது உடனடி பாதிப்பை ஏற்படுத்தா விட்டாலும் சிறிது காலத்துக்கு பின் பாதிப்பு ஏற்படும்.ஒரு சிலர் புரோட்டீன் உணவை தவிர வேறு எதையும் உட்கொள்வதில்லை. இதனால் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு உயிருக்கு அபாயம் ஏற்படலாம் என்றனர்.