search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நேர்த்திக்கடன் செலுத்த மண் குதிரை சுமந்து வந்த பக்தர்கள்
    X

    அவினாசி கோவிலில் குவிந்த பக்தர்கள். 

    நேர்த்திக்கடன் செலுத்த மண் குதிரை சுமந்து வந்த பக்தர்கள்

    • அதிகாலை 4.மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது
    • அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரலாற்று சிறப்புமிக்க அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் மற்றும் ஆகாச ராயர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் பருவ மழை தவறாமல் செய்ய வேண்டும்.

    பொது மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டும். தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெறவேண்டும் என்பதற்காக ஆயிரம் ஆண்டுகளாக அவினாசியை அடுத்து கருணை பாளை யத்திலிருந்து மண்ணால் உருவாக்கப்பட்டு வண்ணம் தீட்டிய குதிரை யை அப்பகுதி மக்கள் ஆண்டுதோறும் சுமந்து வந்து ஆகாச ராயர் கோவிலில் வைப்பது வைதீகம்.அதன்படி நேற்று கருணை பாளையத்திலிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆகாச ராயர் கோவிலுக்கு சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் இந்த ஆண்டு வழக்கம் போல் மண் குதிரையை சுமந்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.தமிழ் புத்தாண்டையொட்டி அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. நேற்று அதிகாலை 4.மணிக்கு கோவில் நடை திறக்க ப்பட்டது.

    காலை முதல் மாலை வரை திரளான பக்தர்கள் அவினாசி லிங்கே ஸ்வரர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் அவினாசி ஒன்றிய த்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு வந்து தீர்த்த குடம் எடுத்து சென்றனர். இதேபோல் அவினாசிராயன் கோவில், கருவலூர் மாரியம்மன் கோ வில், பழங்கரை பொன் சோளீஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவி ல்களிலும் தமிழ் புத்தா ண்டையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

    Next Story
    ×