என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
மக்காச்சோளத்தை சாலையில் காய வைக்கும் விவசாயிகளை படத்தில் காணலாம்.
போதிய உலர் கள வசதி இல்லாததால் மக்காச்சோளத்தை சாலையில் காய வைக்கும் விவசாயிகள்
By
மாலை மலர்7 March 2023 1:33 PM IST

- பருவமழையை ஆதாரமாகக் கொண்டு சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
- அறுவடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உடுமலை :
உடுமலை சுற்றுப்புற பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள விவசாயிகள் திருமூர்த்தி, அமராவதி அணைகள், கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகள், பருவமழையை ஆதாரமாகக் கொண்டு சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நீர் இருப்பு மற்றும் நீர்வரத்திற்கு ஏற்றவாறு நீண்ட, மத்திய, குறுகியகால பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்காச்சோளம் சாகுபடியில் ஈடுபட்டனர். தற்போது அதில் அறுவடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அறுவடை செய்ய ப்பட்ட மக்காச்சோளத்தை காயவைப்பதற்கு உலர்கள ங்கள் இல்லாததால் நான்கு வழி சாலையில் உலர்த்தி வருகின்றனர்.
Next Story
×
X