search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது - தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
    X

    கோப்புபடம்

    சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது - தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

    • விருது பெறுபவர்கள் முதல்-அமைச்சரால் தேர்வு செய்யப்படுவார்கள்.
    • விண்ணப்பிப்பவர்கள் எந்தவித குற்றவியல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்பதற்கான சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்

    திருப்பூர்:

    சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது தமிழக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் பணம், 1 பவுன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கப்படுகிறது. விருது பெறுபவர்கள் முதல்-அமைச்சரால் தேர்வு செய்யப்படுவார்கள். 2023-ம் ஆண்டுக்கான விருது பெறவிண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகள், அதன்காரணமான சாதனைகள், தங்களது சுய விவரம், முழு முகவரி, தொலைபேசி எண் ஆகிய விவரங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் எந்தவித குற்றவியல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்பதற்கான சான்றுடன் கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×