search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாமளாபுரத்தில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
    X

     பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கிய காட்சி.

    சாமளாபுரத்தில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி

    • மாணவ,மாணவிகள் 206 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது
    • நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.செல்வகுமார் பள்ளியின் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,சாமளாபுரத்தில் உள்ள வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் மேல்நிலைப்பள்ளியில் மாணவ,மாணவிகள் 206 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.செல்வகுமார், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் ரத்தினசபாபதி, சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி, சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டிவரதராஜன், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற 13-வது வார்டு கவுன்சிலர் பெரியசாமி ,தி.மு.க. சாமளாபுரம் பேரூர் செயலாளர் பி.வேலுச்சாமி, சாமளாபுரம் பேரூர் துணைச்செயலாளர் எஸ்.பி.தியாகராஜன், மற்றும் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற அனைத்து வார்டு கவுன்சிலர்கள் , சாமளாபுரம் பேரூர் திமுக கட்சியைச் சேர்ந்த அவைத்தலைவர்,ஒன்றியபிரதிதி, மாவட்ட பிரதிநிதி ,வார்டு செயலாளர்கள் ,பள்ளியின் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×